திருகோணமலை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த, புகை விசிறும் பணி

0
55

திருகோணமலை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள தோப்பூர் – மேற்கு கிராமத்தில் இன்று காலை டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்காக புகை விசிறும்
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹில்மி முகைதீனின் ஆலோசனைகளுக்கு அமைவாக வீடுகள் ,பாடசாலைகள் , பொது இடங்கள் மற்றும் டெங்கு பரவுவதற்கு
ஏதுவான இடங்களில் புகை விசிறப்பட்டது.

அண்மைக்காலமாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள தோப்பூர் – மேற்கு பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.