26.1 C
Colombo
Monday, December 5, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருட்டு வீசிடி யில் வில்லனாக நடிக்கும் செந்திலின் புதிய கெட்டப்

நடிகர் செந்தில் தொடர்பாக காதல் சுகுமார் தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்

யெஸ், யூகிக்க முடியாத முகமல்ல இது செந்தில் அண்ணனுடைய நேற்றைய போட்டோ சூட் இது. எனக்கு ஒரு வகையில் சொந்தக்காரர்.ஆரம்ப கட்ட சினிமா தேடுதலில் அண்ணன் வீட்டிலேயே கிடப்பேன்.. அவர் மகன் மணிகண்டப் பிரபு இப்பொழுது பெரிய டெண்டிஸ்ட். இரண்டாவது மகன் சந்துரு இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் அஸோசியேட்டாக பணி புரிகிறார்.

நான் அண்ணனுக்கு மூன்றாவது மகன் போல.என்னுடைய முதல் இயக்கமான *திருட்டு வீசிடி யில் வில்லனாக நடிக்க வேண்டுமெனக் கேட்டு நடிக்க வைத்தேன். அதில்தான் சாக்ஷி அகர்வாலை(bigboss fame) கதாநாயகியாக அறிமுகப்படுத்தினேன்.

அப்போது அண்ணனின் சம்பளம் எங்கள் பட்ஜெட்டுக்குள் வராததால் ஒரு பெரும் தொகையைப் பேசி மூன்று தினம் படப்பிடிப்பு. அதை தினமும் தருவதாகப் சொல்லி அவர் நடித்த காட்சிகளை ஒரே நாளில் பின்னி மில்லில் படமாக்கி விட்டேன்.(என்ன செய்ய தயாரிப்பாளர் நிர்பந்தம்) அடுத்து எடிட்டிங் முடிந்ததும் டப்பிங் பேச அழைத்த போது “சுகு என்னடா ஒரே நாள் சூட் பண்ணுன.

.இன்னும் ரெண்டு நாள் பண்ணனும்ல” என்றார். “அண்ணே எப்டி வந்திருக்குன்னு பார்க்க பிசினஸ்க்காக பண்றோம். இத மட்டும் பேசிக் குடுங்க என்றேன். “சரிடா வரேன்” என்றதும் மனதுக்குள் சமாளித்து விட்டோம் அப்பாடா என நினைத்து வாசலைத் தாண்டவில்லை “சுகு” என அண்ணன் அழைத்ததும் திரும்பிப் பார்த்தேன்.. “உன் படம் எனக்கு ஐநூத்திப் பதுனொன்னாவது… நீ நல்லா வரணும்.அவ்ளோதான் .போ.. என்று சிரித்தார். எனக்கு என்னமோ போலாகி விட்டது. நல்ல ஆன்மா அவர்..நீண்ட ஆயுளுடன் இன்னோர் ரவுண்டு காத்திருக்கு அண்ணாவுக்கு..வாழ்த்துவோமே!!

Related Articles

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின்ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் '2022 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதய ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட...

தலைமுறையினருக்கான இளைஞர் வழிகாட்டல் மாநாடு

தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் பழைய மாணவர்...

இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பிலான செயலமர்வொன்று காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின்ஒளிவிழா நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் '2022 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதய ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட...

தலைமுறையினருக்கான இளைஞர் வழிகாட்டல் மாநாடு

தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் பழைய மாணவர்...

இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பில் செயலமர்வு

மட்டக்களப்பு காத்தான்குடியில் இஸ்லாமும் மனித உரிமையும் எனும் தலைப்பிலான செயலமர்வொன்று காத்தான்குடி ஹோட்டல் பீச் வே மண்டபத்தில் நடைபெற்றது. காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர்...

அரிய வகை புலி இனம் மூதூர் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது

( த பிஸ்ஸிங் கெட் )என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில் ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது

விரிவுரையாளர் ஏ.ஜெ.எல். வஸீல் தொகுத்து எழுதிய நூல் வெளியீடு

கிழக்கிலங்கையின் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஏ.ஜெ.எல். வஸீல் தொகுத்து எழுதிய 'மருதமுனை வரலாற்றில் மூத்த கல்வியியலாளர் ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.ஏ.எஸ் இஸ்மாயில் மௌலானா ஜே. பி அவர்களின்...