கல்கிஸ்ஸை – படோவிட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்..கொழும்பு, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர், படோவிட்ட பிரதேசத்தில் வசித்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.