Home உள்நாட்டு துப்பாக்கி தயாரிப்பு பட்டறை நடத்திய தந்தை-மகன் கைது கம்பஹா மாவட்டத்தின் கலேலிய பிரதேசத்தில் டங்கன் மாவத்தையில் தொழிற்சாலை என்ற போர்வையில் இயங்கி வந்த துப்பாக்கி உற்பத்தி பட்டறையை பொலிஸார் முறியடித்துள்ளனர்.துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து ஆயுதங்களை விற்பனை செய்ததற்காக அல்லது வாடகைக்கு விடுவதற்காக 62 வயதுடைய நபரையும் அவரது 32 வயது மகனையும் பல்லேவல பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமைகைது செய்துள்ளனர்.இவர்கள் இருவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை பல நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இரண்டு இயந்திர பாகங்கள், ஒரு ஏர் ரைபிள், 2 கிலோ ஈயம், உலோக குழாய்கள், கத்திகள், வெடிமருந்து உறைகள் உட்பட துப்பாக்கிகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த வியாபாரத்திற்கு உதவிய ஏனைய நபர்களை கண்டறிய பல்லேவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.