துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மூவர் கைது!

0
125

கண்டி – அக்குரணை பகுதியில் வெடிபொருட்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு பேர், அக்குரணை நகரில் நபர் ஒருவருக்கு பொதியொன்றை வழங்கியுள்ளனர்.

சந்தேகமடைந்த பொலிஸார், குறித்த பொதியை சோதனைக்கு உட்படுத்தியபோது, அந்த பொதியிலிருந்த எஸ்.ஜீ ரக 7 தோட்டாக்களும், ரி – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்களும், 5 வெற்றுத் தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரணை, இறம்பொடை மற்றும் அட்டபாகை பகுதியைச்சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.