தென்னை தோட்டங்களில் வெள்ளை ஈ நோயின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் (CRI) எச்சரிக்கை விடுத்துள்ளது, நிலவும் வரட்சியான காலநிலையே இந்த அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரட்சியான காலநிலைக்கும் அதிக நோய் பரவலுக்கும் இடையிலான தொடர்பையும் CRI இன் பிரதி ஆராய்ச்சிப் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு தங்கள் பயிர்களைப் பாதுகாக்க உதவும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.