24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஹெட்டிமுல்ல, நுககஹ வீதி பிரதேசத்தில் தென்னம் பூ வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் 25 மீற்றர் உயரமான தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கொஸ் வாடியா மஹா வேவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜயலத் பேடி அன்டனி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நபர் நேற்று (31) மாலை தென்னந்தோப்பில் தென்னம் பூ வெட்டும் தொழிலில் ஈடுபட்ருக்கும்போதே இவ்வாறு கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தென்னந்தோப்பு உரிமையாளர் மற்றும் மரண விசாரணை அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles