தென்மராட்சி – வரணியில் விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

0
61

யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணி விவசாயிகள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்தோட இடமின்றி வயல் நிலங்களில் தேங்கி நிற்பதனால் தமது நெற்செய்கை முற்றுமுழுதாக அழிவடைந்துள்ளதாக தெரிவித்த விவசாயிகள், இன்று வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொண்டைமானாற்றில் நீர் கடலோடு கலக்கும் அணை பூட்டப்பட்டுள்ளதால், வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் நெற்பயிர்கள் அழிவடைந்து வருவதாகவும் போராட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.