தென் மாகாணத்திலிருந்து வந்துள்ள அனைவருக்கும் pCR பரிசோதனை!

0
201

தென் மாகாணத்தில் இருந்து வருகைதந்த அனைவரையும் தனிமைப்படுத்தி pCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

தற்போது வடபகுதி covid 19நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 
நேற்று யாழ் மாவட்டத்தில்6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . அனைவரும் தென் மாகாணத்தில் இருந்து வருகை தந்தவர்கள் .எனவே தென் மாகாணத்திலிருந்து வட பகுதியில்  தங்கியிருக்கும் அனைவரையும்  தனிமைப்படுத்தி pcr  பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளார்கள் 

அத்துடன் நேற்றைய தினம்யாழ் மாவட்ட தடுப்பு செயலணிகூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தி சமூக தொற்றினை தடுப்பதற்கான  ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது
 மேலும் பேலியகொட சந்தையுடன் தொடர்புடையவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான pcr பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது 
 யாழில் நேற்றைய தினம் தொற்று உறுதியான   ஆறு பேருடனும் நெருக்கமாக தொடர்புகளைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு pcr பரிசோதனை  மேற்கொள்ளப்படும் எனவும்  தெரிவித்தார்.