Home உள்நாட்டு தெஹியத்தகண்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

தெஹியத்தகண்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
2
Shooting a gun in night

தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணை ஒன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தெஹியத்தகண்டிய முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வீரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாகவும் காயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் தெஹியத்தகண்டிய காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக தெஹியத்தகண்டிய காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.