தேர்தல் ஆணையாளர் ஓய்வு பெறுகிறார்

0
226

தேசிய தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக்காலம்  இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

அவரது அலுவலத்தில் உள்ள அனைத்து பொறுப்புக்களையும் ஒப்படைத்து விட்டு செல்வதற்கான ஆயத்தங்களை அவர் முன்னெடுத்து வருகிறார்.

மஹிந்த தேசப்பிரிய தேர்தல் அலுவலகத்தில் சுமார் 37 வருட காலம் சேவை புரிந்துள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையினால், தேர்தல் ஆணைக்குழுவில் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.  ஐந்து புதிய ஆணையர்கள் தேசிய தேர்தல் ஆணையத்தில் நியமிக்கப்படுவார்கள். இது 19 ஆவது திருத்தத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களை விட அதிகபடியான எண்ணிக்கையாகும்.