31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தொற்றிலிருந்து மீண்டவர்களிடமிருந்து கொரோனா ஆபத்தில்லை- மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களிடமிருந்து வைரஸ் தொற்றும் ஆபத்தில்லை என தேசிய தொற்று நோய் மருத்துவமனையின் மருத்துவர் ஆனந்த விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 14 நாள்களில் அதிலிருந்து மீண்டவர்களிடமிருந்து ஏனைய நபர்களுக்கு வைரஸ் பரவாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட நிபுணர்கள் இது குறித்து ஆராய்ந்துள்ளனர். நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என உறுதியானால் இரண்டு முறை பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவரை வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்தார்.

நோய் அறிகுறி இல்லாதவர்கள் வைரஸை பரப்பமாட்டார்கள் என்பதால் அவர்களைப் பத்து நாள்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாள்களுக்கு தனிமைப்படுத்துகின்றது.

அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்தவர்களில் அதிகளவானவர்கள் முதியவர்கள். அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டாலும் வேறு நோய்களாலேயே உயிரிழந்தனர்.

ஏற்கனவே ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சையை முன்னெடுக்காவிட்டால் அவர்களின் நிலை மோசமடையலாம் எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles