தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் இரண்டாவது இடத்துக்காக போராடுவதாக முன்னாள் அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
‘அநுரதிஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இரண்டாவது இடத்துக்காக போராடுகின்றனர். நாட்டுக்கு ஒரு நெருக்கடி வந்ததும் எல்லா அரசியல் தலைவர்களும் ஓடிவிட்டனர். ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே சவாலை ஏற்றுக்கொள்ள முடிந்தது. அந்தச் சவாலை வெல்வதற்கு இந்நாட்டு மக்கள் அவருக்கு பலத்தைக் கொடுத்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்பாடுபட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர். சொத்துக்களை இழந்தாலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்பாடுபட்டார்.
மக்களின் வாழ்வுரிமையை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிந்தித்தார். பொருளாதாரம் பற்றிய அவரது புரிதலின் காரணமாக, நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விரைவாக மீட்கப்பட்டது.
பங்களாதேஷின் இன்றைய நிலையைப் பார்த்தால், சோசலிசத்தின் செயற்பாடுகளைக் காணலாம். சவால்களை ஏற்கக்கூடிய ஒரு தலைமை சோசலிசத்தில் இருந்திருந்தால், அது 2022 இல் நாட்டைப் பொறுப்பேற்றிருக்கும்.
ஆனால் அநுரகுமார திஸாநாயக்கவைப் போன்று சஜித் பிரேமதாசவும் அன்று நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அவருக்கு சிறந்த அணி இருப்பதாகச் சொல்கிறார்கள்.ஆனால் அப்போதும் அந்த அணிகள் அப்படியேதான் இருந்தன. எனவே இந்த தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுக்கவேண்டும்.