நல்லூர் ஆலய நிர்வாகத்தின் முன்மாதிரியான செயற்பாடு சுகாதார நடைமுறைஇறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு

0
194

நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றி ஆலய பூசை வழிபாடு

தற்போது நாட்டில் கொரோணா தொற்று  அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்தில் கொரனோ தொற்று நிலையினை தடுக்கும் முகமாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக தனித்தனியாக சுற்றறிக்கைகள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
  ஆலயங்களில் பூசை வழிபாடுகளின் போதுபின்பற்ற வேண்டிய சுகாதாரநடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கைக்கு அமைய 
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில்  பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ளும் அடியவர்கள் தமது பதிவுகளை மேற்கொண்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியே ஆலயத்திற்குள் சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள் 

ஆலயத்தின் வெளி வீதியிலிருந்து ஆலயத்துக்குள் நுழையும் அனைத்து பக்தர்களும் பதிவுகளை மேற்கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒரே நேரத்தில் குறிப்பிட்டளவு எண்ணிக்கையான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here