களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகொட பிரதேசத்தில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த நபர் உள்ளடங்களாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாகொட பிரதேசத்தை சேர்ந்த 21 மற்றும் 38 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.