நாடாளுமன்றம் ஜூலை-9 கூடவுள்ளது

0
44

நாடாளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஜூலை 09ஆம் திகதி இலங்கைத் தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது. 10ஆம் திகதி மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள், இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 11ஆம் திகதிவிலங்கின நலம்பேணல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

ஜூலை 12ஆம் திகதி தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.