நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
22

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இயக்கத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நிரூபா பல்லேவத்த தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதன்படி, நாட்டில் இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் 1,084  தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அதிகளவான தொழுநோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆகும்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்திலிருந்து  113 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 1,500 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.