நாட்டில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

0
9

நாட்டில் 2025 ஆம் ஆண்டின்  இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட 05 சம்பவங்கள் உட்பட மொத்தமாக 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த வருடத்தில் இடம்பெற்ற 17 சம்பவங்களுக்கு இதுவரை விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், தென் மற்றும் மேல் மாகாணங்களில் அதிகளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.