கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க கொழும்பு கிழக்கு மருத்துவமனையில் புதிய பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரையில் 80இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில்; 28 கர்ப்பிணிகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும்,
கொரோனா தொற்றுக்குள்ளான 4 கர்ப்பிணிகள் பிரசவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.