நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு – வஜிர

0
21

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எந்த கட்சிக்கு சென்றாலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது அவசியமான விடயமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரம் எந்த கட்சிக்கு சென்றாலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது அவசியமான விடயமாகும்.

ஆகவே நிர்வாக இயந்திரம் அரசியலமைப்பிற்கு அமைய செயற்பட வேண்டியது அவசியமான விடயமாகும்.

நாட்டில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒன்றிணைந்த நாடு என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியிலேயே சுயாதீனமாக செயற்பட்டுள்ளது.

ஆகவே ஐக்கிய தேசிய கட்சி ஒரு புறம் அரசியல் முறைமையை உருவாக்கும் கட்சியாக இருந்துள்ளது. என தெரிவித்தார்