கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதன் மூலம் நாட்டை அடிபாதாளத்திற்குள் அரசாங்கம் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தற்போதைய நிலையில் நாடு இக்கட்டான நி யில் உள்ளதாகவும், இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டமைக்கான காரணத்தை அரசாங்கம் இதுவரை தெரிவிக்க தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடு கடும் பின்னடைவை சந்தித்துள்ள தற்போதைய சூழலில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொள்வதை கண்டடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாது என நாராஹேன்பிட்டிய அபேராமய விஹாராதிபதி முரித்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
´சுகாதார அதிகாரிகள் தற்போதைய நிலைமை குறித்து ஏற்கனவே சிந்தித்து செயற்படவில்லை. அதனால் தற்போது கொவிட் 19 பரவல் நாட்டில் வியாபித்துள்ளது. அதற்கான பொறுப்பை ஏற்பார் இல்லை. அரச வைத்திய பரிசோதனை நிலையத்தின் செயற்பாடு பூச்சியமாக காணப்படுகின்றது. அந்த நிலையத்தை தனியாருக்கு வழங்குவதில் பிரச்சினையுள்ளது´ என்றார்.