31 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘நான் திரும்ப வந்துவிட்டேன்’ – சமூக ஊடகங்களில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி

டொனால்ட் ட்ரம்பின் முடக்கப்பட்ட பேஸ்புக், யூடியூப் கணக்கு 2 ஆண்டுகளுக்கு பின் வழமைக்கு திரும்பியுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2017 முதல் 2021 ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, 2021 தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிபெற்றார்.

ஆனால், தனது தோல்வியை ஏற்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறை தூண்டும் வகையில் பேசினார். இதை அவர் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பினார். அவரது பேச்சையடுத்து ஜனவரி 6ம் திகதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், 2 ஆண்டுகளாக முடக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், யூடியூப் பக்கங்கள் இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சமூக ஊடக பக்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் ‘நான் திரும்ப வந்துவிட்டேன்’ என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை இணைத்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles