28.5 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் போலி இரசாயனப் பசளைகளை கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப் பசளைகளை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருடன் திருக்கோயில் விசேட அதிரடிப்படை அதிகாரி ஐ பி கன்னங்கர தலைமையிலான குழுவினரே குறித்த பிரதேசத்தில் பதுங்கி இருந்து இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்

இன்று மதியம் மேற்கொண்ட இந்த திடீர் சுற்றி வளைப்பின் போது எம்.ஒ.பி எனும் பெயரில் போலியாக கலப்படம் செய்து விற்பனைக்கு பொதி செய்யப்பட்டு கொண்டிருந்த கலப்படமான இரசாயன பசளைகளை அதிரடிப்படையினர் கைப்பற்றி உள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதியளிக்கப்பட்ட பசளையுடன் உப்பு மற்றும் இதர பொருட்களை சட்டவிரோதமாக கலந்து பொதி செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டவிரோத பசளையும் கைப்பற்றப்பட்டு களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத இரசாயன பசளை கலவை நிலையமானது கல்முனைகுடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமான அரிசி ஆலை என தெரிய வந்துள்ளது.

அத்துடன் இங்கு போலியாக கலப்படம் செய்யப்படும் பசலைகளை பொதி செய்வதற்காக அரச இலட்சினை பொறிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த பக்கெட்டுகளும் பசளை பேக்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் சட்டவிரோத பசளையையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles