நினைவேந்தலை பரவலாக மயப்படுத்த வேண்டும்!

0
76

மே 18 இனப்படுகொலை வாரத்தை இவ்வாண்டில் இருந்து புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் யாழில் சிவில் அமைப்புக்கள் கூடி ஆராய்வு.

மக்கள் தமக்கு எவ்வாறான வாழ்க்கை தேவை, அதற்கு எவ்வாறான சமூக பொருளாதார அரசியல் ஏற்பாடுகள் தேவை என்பதைத் தாமே சிந்தித்து, அதற்காக குரல் கொடுத்து செயற்படும் காலம் வந்து விட்டது.

மக்களுக்கு விரோதமாக செயற்படும் அரசுகள் பெருவணிக நிறுவனங்கள், கட்சிகள், அமைப்புகளின் பிரச்சாரங்களிலிருந்தும், மூளைச்சலவை செய்யப்படுவதிலிருந்தும் தம்மைப்விடுவித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவையும் இன்று காசாவில் நிகழ்ந்து கொண்டிருப்பவையும் இனிமேலும் எந்த மக்களுக்கும் நிகழக் கூடாது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலை மீள நிகழாமை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக மக்கள் அனைவரும் சிந்திக்கும் தளமாக உருவமைப்பு செய்வதற்கு மக்கள் சார்ந்து சிந்திக்கும் செயற்படும் பல சிவில் சமூக அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று (21) இடம்பெற்ற சிவில் சமூக அமைப்புகளின் கலந்துரையாடலிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் மேற்படி விடயங்கள் பகிரப்பட்டன.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலை பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாகவும் மக்கள் மயப்படுத்தி மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் கலந்துரையாடப்பட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நினைவேந்தல் செயற்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்து கொண்ட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.