25.2 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நியூயோர்க் சுவாமிநாராயணன் கோயிலை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்

அமெரிக்காவின் நியூயோர்க்கில் மெல்வில்லே பகுதியில் அமைந்துள்ள சுவாமிநாராயணன் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் கோவிலைச் சேதப்படுத்தியுள்ளனர்.

இது அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2-ஆவது மிகப்பெரிய கோவில் என்ற சிறப்பை பெற்றது. கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என பதிவிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles