நீண்ட கால மோதல் கொலையில் முடிந்தது!

0
185

வவுனியா – போகஸ்வௌ, நந்திமித்ரகம பிரதேசத்தில் 54 வயதுடைய நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக நிலவி வந்த பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.