நுகேகொடை – நாவல வீதியில் போக்குவரத்திற்கு தடை!

0
211

எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக நுகேகொடை – நாவல வீதியின் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போக்குவரத்திற்கு தடையேற்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக குறித்த எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.