கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான வலயமாக பொரளைப் பகுதியுள்ளது என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பொதுமக்களுக்கிடையில் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பில் கண்டறிய சுகாதார அதிகாரிகள் எழுமாற்று அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளின்போது நூற்றுக்கு 90 வீதமானவர்கள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களைச் சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பிரதேசம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை வீடுகளில் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.