ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள இறைச்சியை தனிமைப்படுத்தல் முறையின் கீழ் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி தெரிவித்தார்.
மேலும், ஆபிரிக்க பன்றிக்காய்ச்சலால் பல பண்ணைகள் முற்றாக அழிந்துள்ளதாகவும் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் தமது தொழில்களை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.