பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி வைத்தியர்கள் சாதனை!

0
71

அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபரின் 2 சிறுநீரகமும் செயலிழந்துள்ளது.

இதன்போது அவருக்கு மாசசூசெட்ஸ் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிவடைந்து 05 வருடங்களுக்குள் மீண்டும் அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்துள்ளது.

இந்த நிலையில் வைத்தியர்கள் தமது இறுதி முயற்சியாக நோயாளியின் அனுமதியுடன் அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தியுள்ளனர் .

இதனை தொடர்ந்த வைத்தியர்கள் அதில் வெற்றி கண்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்தியர் டாட்சுவோ கவாய், “பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக காணப்படுவதாகவும், பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக அது வேலை செய்ய ஆரம்பித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி எனவும் , இந்த முறை வெற்றிபெற்றால், பல நோயாளிகள் பலனடைவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.