ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வருவதால் கொஸ்கம மற்றும் பாதுக்க கால்நடை வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட பன்றி வளர்ப்புத் தொழில் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தாங்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் உள்ளதாக பன்றிப் பண்ணை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொஸ்கம மற்றும் பாதுக்க கால்நடை வைத்திய அதிகாரியின் எல்லைக்குட்பட்ட 176 பதிவு செய்யப்பட்ட பன்றிப் பண்ணைகளில் சுமார் 25,000 விலங்குகள் இருந்தன, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 3,000 ஆகக் குறைந்துள்ளது.இதனால், குறித்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வந்த சுமார் 50,000 பேர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் பன்றிகள் இதேபோன்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டன, அந்த நேரத்தில், இலங்கையில் பன்றி இறைச்சி தொழிலும் மோசமான நிலைமையை எதிர்கொண்டது.எவ்வாறாயினும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி இல்லாதது நோய் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருப்பதாக கால்நடை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.