26.2 C
Colombo
Wednesday, October 9, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 பேருந்து சேவை இடைநிறுத்தம்.

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த பலர் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்டது.

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்த நிலையில் அவர் கிராமத்தில் நடமாடியுள்ளார்.

இந்த நிலையில் ராஜ கிராமத்தில் 60 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த யாராவது தனியார் பேருந்து சேவையில் கடமையாற்றினால் பயணிகளுக்கு தொற்று ஏற்படலாம்.

அதனால் தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles