பள்ளத்தில் கவிழ்ந்து பாரவூர்தி விபத்து

0
25

கண்டி – மாத்தளை ஏ9 வீதியில் இன்று காலை மணல் ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது .இவ்விபத்தில் பாரவூர்தியின் சாரதி காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கண்டியிலிருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.