பழுதான காரை விற்ற BMW நிறுவனம் : உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

0
67

இந்தியாவில், பி.எம்.டபிள்யூ நிறுமனமானது கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி பல குறைப்பாடுகளுடன் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் ஒன்றை விற்றுள்ளனர்.

குறித்த கார் வாங்கி 4 நாட்களில் பழுதாகியதால் கார் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த வழக்கில், பழுதடைந்த பிஎம்டபிள்யூ காருக்கு பதிலாக புதிய காரை வாடிக்கையாளருக்கு வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால் வாடிக்கையாளர் புதிய காரை வாங்க மறுத்துவிட்டு மாறாக நட்டஈடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பழுதடைந்த காரை விற்றதற்காக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் 50 இலட்சம் (இந்திய ரூபா) நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் பழைய காருக்கு பதிலாக புதிய காரை வரும் ஒகஸ்ட் 10ஆம் திகதிக்குள் மாற்றிக்கொடுக்க வேண்டும் எனவும் இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.