பாகிஸ்தானில் சாலை விபத்து; 13 பேர் பலி

0
93

பாகிஸ்தானில் லாகூர் நகரில் இருந்து 590 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பஞ்சாப் நகருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்தும், பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் சுமார் 13பேர் மரணமாகியுள்ளதாகவும், 5 பேர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேகமாக சென்ற பயணிகள் பேரூந்து வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.