33 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்குபவர்களுக்கு நான்கு மாத கொடுப்பனவு வழங்கப்படவில்லை – ஜோசப் ஸ்டாலின்

பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு நான்கு மாத காலத்துக்கான பணம் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனூடாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்போது மாணவர்களுக்கு போசணைமிக்க உணவை பெற்றுக்கொடுப்பது பாரிய பிரச்சினையாக மாறும் என்பது தெளிவாகின்றது.

11 இலட்சம் மாணவர்களுக்கு அரசாங்கமானது இந்த போசணை வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்கின்றது.

43 இலட்சம் மாணவர்களில் 11 இலட்சம் மாணவர்களுக்கே போசணை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வேலைத்திட்டதை சமுர்த்தி பயணாளிகளே முன்னெடுத்து செல்கின்றனர்.

சமுர்த்தி பயனாளிகள் எவ்வித கொடுப்பனவைவும் பெற்றுக்கொள்ளாமல் மூன்று மாதமாக மாணவர்களுக்கு பகலுணவை வழங்கி வருகின்றனர்.

கடந்த காலங்களில் யுனிசெப், உலக உணவுத்திட்டம் என்பன இலங்கையில் சிறுவர்கள் மந்த போசணை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொடர்ச்சியாகக் கூறி வந்தன.

எனவே பாடசாலை மாணவர்களுக்கு, சிறுவர்களுக்கான போசணை வேலைத்திட்டம் என்பது மிகவும் அவசியமானது.

பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவை வழங்குபவர்களுக்கு திறைச்சேரியின் உதவியை பெற்று கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திறைச்சேரி எப்போது பணம் வழங்கும் என்று தெரியாது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles