பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனை!

0
178

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
இச்சோதனையின் போது சந்தேகநபரிடம் இருந்து 710 மில்லிகிராம் கேரளா கஞ்சாஇ இலத்திரனியல் தராசு மற்றும் 13500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.