கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தவர்களை நாளை முதல் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
நோயாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை கடுமையாக பின்பற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர்கள் பிசிஆர் சோதனை முடிவுகள் வெளியாகும்வரை வீடுகளிற்குள்ளேயே இருக்கவேண்டும் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
முதியவர்கள் வசிக்கும் வீடுகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்வதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.