நெதர்லாந்து De Akkers metro ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு தடையை உடைத்துக்கொண்டு சென்று மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள திமிங்கில வால் சிற்பத்தில் மோதி வெளியில் தாங்கி நின்றது. இச்சம்பவம் அதிகாலை 12.30 மணிக்கு இடம்பெற்றது
ரயில் சாரதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் பயணிகள் யாரும் அந்தநேரத்தில் ரயிலில் இருக்கவில்லை.
அங்கு அமைக்கப்பட்டிருந்த வெள்ளிநிற திமிங்கில வால் பகுதி இன்மையெனில் ரயில் பாய்ந்து முழுமையாக சேதமடைந்திருந்திருக்கும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார். ரயிலைதாங்கியது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்
ரயிலின் முன்பக்கம் மேலே 10 மீற்றர் (30 அடி) வெளியில் தொங்கியது, இந்த திமிங்கில சிற்பம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோவின் அடியில் உள்ள ஒரு பூங்காவில் கட்டப்பட்டது,
இதில் இரண்டு பெரிய திமிங்கல வால்கள் தண்ணீரிலிருந்து வெளியே நிற்பதுபோல அமைக்கப்பட்டது, அவற்றில் ஒன்று ரயிலைக் காப்பாற்றியுள்ளது.
ரயிலை எவ்வாறு பாதுகாப்பாக அகற்றுவது என்பது குறித்து சிற்ப கட்டிடக் கலைஞர் உட்பட மீட்புக்குழுவினர் விபத்துக்கள்ளான இடத்தில் ஆலோசனை நடத்திவருகின்றனர். இதனை சுற்றி நீர், எனவே ஒரு கிரேன் அங்கு செல்ல முடியாது நிலையும் உள்ளது.