ஸ்ரீபாத உடமலுவில் இருந்து கீழே குதித்து காணாமல் போன இளைஞனைத் தேடும் நடவடிக்கை நேற்று பிற்பகலுடன் நிறுத்தப்பட்டதாக லக்ஷபான இராணுவ தளத்தின் கட்டளை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 19ஆம் திகதி காலை 10.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் இருந்து இரண்டு யுவதிகளுடன் ஸ்ரீ பாத தரிசனம் செய்ய வந்த 33 வயதுடைய நபர், ஸ்ரீ பாத உடமலுவையிலிருந்து இரத்தினபுரி வீதியில் ஓடி பாதுகாப்பு வேலியில் இருந்து கீழே குதித்துள்ளார்.இதன்படி, லக்ஷபான இராணுவ முகாமில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவினர் காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆனால் நேற்று வரை காணாமல் போன இளைஞன் தொடர்பில் எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், ஸ்ரீ பாதஸ்தானபித தேரரின் பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக கட்டளை அதிகாரி கூறுகிறார்.
ஸ்ரீ பாத உடமலுவையில் இருந்து கீழே குதித்த இளைஞன் காப்புக்காடு வழியாக இறங்கி ஓடியிருக்கலாம் என சந்தேகிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள், ஸ்ரீ பாத உடமலுவையில் இருந்து கீழே குதிப்பதற்குமுன் குறித்த இளைஞன் சுயநினைவின்றி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.