24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாராளுமன்ற குழுத் தலைவர் யார்?

இரா. சம்பந்தனின் இடத்துக்கு அவருக்கு அடுத்தபடியான வாக்கு களை பெற்ற குகதாசன் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அதுதான் தேர்தல் சட்டம். இந்த விடயத்தில் கட்சிகள் தலையீடு செய்ய முடியாது. ஆனால், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்திருக்கும் கருத்துகள் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேவேளை, தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஒன்றில் மாவை அதனை தடுமாற்றத்தில் குறிப்பிட்டாரா அல்லது விடயங்களை சரியாகப் புரிந்து கொண்டுதான் கூறினாரா? சம்பந்தனின் மறைவை தொடர்ந்து திருகோணமலை பாராளு மன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படவுள்ள குகதாசனை கூட்ட மைப்பின் தலைவராக நியமிக்கப்போவதாக மாவை குறிப்பிட்டிருந்தார். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று ஒன்றில்லை.
அந்த அடிப்படையில் நோக்கினால் மாவை விடயங்களை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவராக இருக்கின்றார். என்னும், முடிவுக்கே ஒருவர் வரநேரிடும். ஒருவேளை அவர் பாராளுமன்றக் குழுவின் தலைவர் தொடர்பில் பேசுகின்றார் என்றால் – அதற்கும் குகதாசனுக் கும் தொடர்பில்லை. அதற்கான தகுதிநிலையுடையவர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் குகதாசன் ஒரு பாலகர். பாராளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுபவர் அனுப வத்தின் அடிப்படையிலும் – அதேவேளை, அதிக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனும்தான் தெரிவாக முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய காலத்தில் அனைத்து கட்சிகளின் சம்மதத்துடன்தான் திருவாளர் சம்பந்தன் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவராக தெரிவானார்.
ஆனால், கூட்டமைப்பு உடைவுற்ற பின்னரும்கூட சம்பந்தனை அந்தப் பொறுப்பிலிருந்து விலகுமாறு பங்காளிக் கட்சிகள் கோர வில்லை. பெருந்தன்மையுடனும் – சம்பந்தனின் அனுபவத்தை கருத்தில் கொண்டும் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் தொடர்ந் தும் தன்னை அடையாளப்படுத்துவதை அவர்கள் எவருமே எதிர்க்க வில்லை.
ஆனால், இப்போது நிலைமைகள் அப்படியில்லை. சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்றபோதே கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்குமாறு பங்காளிக் கட்சிகளின் ஒன்றான ரெலோ கோரியிருந்தது. அதற்கு சம்பந்தனும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனாலும், பாராளு மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை தமிழ் அரசு கட்சியிடம் இருந்த காரணத்தால் இறுதி முடிவெடுக்க முடியாமல் போனது. தற்போது நிலைமைகள் தலைகீழாகியுள்ளன.
தற்போதைய நிலையில் விட்டுக் கொடுப்பின் அடிப்படையிலும் – அனுபவத்தின் அடிப்படையிலும் பொருத்தமான ஒருவரை பாராளு மன்ற குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும்.
தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் நீண்ட அனுபமுள்ளவர்கள் என்று பார்த்தால் முதலில் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்தான் அனுபவத்தில் மூத்தவர். வயதில் மூத்தவராக தர்மலிங்கம் சித்தார்த்தன் இருந்தாலும்கூட, கோவிந்தன் கருணாகரம் 1989இல் பாராளுமன்றம் சென்றவர்.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் பாராளுமன்ற குழுக்களின் தலை வர் பொறுப்புக்குரிய கட்சியாக ரெலோவே இருக்கின்றது. அது யார் என்பதை அவர்களின் கட்சி தீர்மானிக்க முடியும். இந்த முடிவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் சரியானது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles