20 ஆவது அரசியலமைப்பு திருத்தப் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட ஐந்து ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
அதன்படி சிங்கள பத்திரிகையைச் சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களும், ஆங்கில பத்திரிகையைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளரும், ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடகவியலாளரும் இவ்வாறு கொரோனா தொற்றுக் குள்ளாகியுள்ளதாகப் பாராளுமன்ற குழு உறுதிப்படுத் தியுள்ளது.
இந்நிலையில், குறித்த நாட்களில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த அனைத்து ஊடகவியலாளர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .
இதேவேளை பாராளுன்றில் நேற்று சுகாதார கட்டளைச் சட்டங்கள் மீதான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விவாதத்தின்போது, பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் எவரும், பாராளுமன்ற வளாகத்திற்குள் வைத்து கொ ரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினார்.