கடந்த வருடம் 83,024 மெற்றிக் தொன் முழு பால் மா இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட பால் மா கையிருப்பின் பெறுமதி 59,175 மில்லியன் ரூபாவாகும்.
நாட்டின் வருடாந்த உள்நாட்டு பால் உற்பத்தியானது, மொத்த பால் தேவையை விட மிகவும் குறைவாக உள்ளதால், பற்றாக்குறையை சமாளிக்க செறிவூட்டப்பட்ட பால் மாவை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கை 1.1 மில்லியன் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 0.3 மில்லியனாக காணப்படுகிறது.