பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்திய போதிலும் இன்னமும் முடிவுகள் வராதவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படுத்தி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
பிசிஆர் சோதனைக்கு தங்களை உட்படு;த்திய பலர் முடிவுகள் வராதநிலையில் பல இடங்களுக்கு சென்றுள்ளதை அவதானித்துள்ளோம் இது ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் நோயாளியாகயிருக்கலாம் அல்லதுபாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்திருக்கலாம் என்ற காரணத்திற்காகவே உங்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம் உங்களை வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.