அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் 53ஆவது நினைவு தின நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (2020.11.06) தங்கல்லையில் உள்ள டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக், அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வு, கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களுடன், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.
தங்கல்லை பொலொம்மாறுவ புரான வனவாசி, குடா விகாரையின் விகாராதிகாரி, தம்மதின்ன மஹா பிரிவெனாவின் பணி அதிகாரியும், ஓய்வுபெற்ற பிரிவெனா உதவியாளரும், கல்வி பணிப்பாளருமான பண்டிதர் மண்டாடுவே தீரானந்த தேரரினால் இதன்போது வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ரத்மலானை விக்கிந்தாராமய, தங்கல்லை வஜிரகிரி விகாரை, உபய விகாராதிபதி, தென்னிலங்கைக்கான நீதித்துறை சங்கநாயக்கர் மிரிஸ்ஸே தம்மாவங்ஷ தேரரினால் பௌத்த அனுசாசனம் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர ஆகியோரும் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட மற்றும் தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கபில திசாநாயக்க ஆகியோர் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் உருச்சிலைக்கு குரக்கன் பூக்களிலான மாலையொன்றை அணிவித்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, எஸ்எம்.சந்திரசேன, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட, தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கபில திசாநாயக்க மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு