உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது – 73.
இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். மும்பையைச் சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தார்.
ஜாகிர் உசேன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு இந்திய மத்திய அரசு பத்மசிறீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது. ஜாகிர் உசேன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், ஜாகிர் உசேனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.