24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரபா வழியில், மீண்டும் கூட்டமைப்பு- யாழில் ஸ்ரீதரன் விடுத்த அதிரடி அறிவிப்பு

உலகத்தால் உற்றுநோக்கப்படும் யாழ்ப்பாணத்தின் தமிழ்த் தேசியம் என்பது கீழிறக்கப்பட்ட நிலைமையை, தேர்தல் முடிவுகள் தந்துள்ளதாக
யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில், நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சிவஞானம் ஸ்ரீதரன்
தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகம் ஒன்றிற்கு,தேர்தலின் பின்னர் வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கேள்வி: தமிழரசுக் கட்சி சார்பாக யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் தொகுதியில், அதிகூடிய வாக்குகளுடன் வெற்றி பெற்றதை எவ்வாறு உணர்கின்றீர்கள்?

பதில்: நான் இதனை ஒரு பெரு மகிழ்ச்சி என கூற முனையவில்லை. ஆனால் மக்கள் ஒரு ஆணை தந்திருக்கின்றனர். எங்களுடைய கட்சி வீழ்ச்சியடைந்துள்ளது. எமது கட்சிக்கான மிகப்பெரும் பின்னடைவை நாங்கள் சந்தித்து இருக்கின்றோம். அதிலும் உலகத்தில் பார்க்கப்படும் யாழ்ப்பாணத்தின் தமிழ்த் தேசியம் என்பது கீழிறக்கப்பட்ட நிலையில், எல்லோருக்கும் மனவேதனையைக் கொடுக்கும் சூழலைக்கொடுக்கின்றது.
இந்தச் சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றால், மக்களுடைய இந்த ஆணையை நாங்கள் நன்றாகப் பயன்படுத்தி, எல்லோரையும் இணைத்து, யாரையும் வெளியே விடாத ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்க வேண்டிய ஒரு மிகக்கட்டாயமான தேவைக்குள் இருக்கின்றோம் என்பதை நான் உணர்கின்றேன்.

தேசியப் பட்டியல் மூலம் கிடைத்திருக்கின்ற ஆசனம் தொடர்பில் எமது கட்சியின் உயர்மட்டக் குழு நாளை அல்லது நாளை மறுதினம்கூடி, உயர்மட்டக் குழுவாக ஆராய்ந்து முடிவெடுப்போம். இத்தனை காலமாக அப்படி உயர்மட்டக் குழு ஒன்றுகூடி முடிவுகள் எடுக்கப்படுவதில்லை. இம்முறை கட்டாயமாக உயர்மட்டக் குழுவில் கூடித்தான் அம் முடிவினை எடுப்போம்.

கேள்வி: தேசிய மக்கள் சக்தி வடக்கில் அதிக ஆசனங்களைப் பெற்றமை தொடர்பான உங்கள் கருத்து என்ன?

பதில்: தேசிய மக்கள் சக்திக்கு அலையொன்று எழுந்திருக்கின்றது. அது இலங்கை முழுவதும் எழுந்திருக்கின்றது. இது ஒரு வரலாற்று வெற்றி. 159 ஆசனங்களை அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றால், அதுவும் இந்த விகிதாசார தேர்தமுறையில் ஒரு சாதனை. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கென அவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எங்கள் மீது கொண்ட கோபம், எமது கட்சி மீதான வழக்குகள், நீதிமன்ற விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு மிகப்பெரிய கோபமுள்ளது. அதற்காக பலர் எழுந்துவந்து எமக்கு வாக்களிக்கவில்லை. கட்சிப் பிரச்சினையை தீர்க்கவில்லை என மக்கள் எங்கள் மீது அதிகமான கோபம் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் எமக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் சிந்தித்தார்கள். அந்தப் பாடத்தைப் படிப்பித்து இருக்கின்றார்கள்.

இதிலிருந்து நாங்கள் உணர்ந்து, எப்படி 2001ம் ஆண்டு தலைவர் பிரபாகரன் ஏன் கூட்டமைப்பை உருவாக்கினார். அந்த ஒற்றுமை ஏன் குலைந்து போனது? இன்று அந்த ஒற்றுமையை எப்படிப் பயன்படுத்துவது? மீண்டும் அதை எப்படி கட்யெழுப்புவது என்ற விடயத்தில் நாங்கள் பலமாகச் செயற்பட வேண்டும். செயற்பட்டால் மட்டுமே மாற்றம் நோக்கிப் போக முடியும்.


எங்களுக்குள் ஒரு ஒற்றுமையான பலத்தை நாங்கள் உருவாக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான நாம் அனைவரும் இணைவோம். எங்களுடைய கரங்களைப் பலப்படுத்தி ஒற்றுமையாகப் பயணிப்போம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles