பிரான்ஸ் ஜனாதிபதியைக் கண்டித்து பாகிஸ்தானில் போராட்டம்!

0
202

பிரான்ஸின் ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோனைக் கண்டித்து பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

இஸ்லாமியர்களின் இறைதூதர் முகமது நபி குறித்த சித்திரங்கள் வெளியிடப்படும் என மக்ரோன் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள பிரான்ஸ் தூதரகத்தை 3000 க்கும் அதிகமானோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் கண்ணீர் புகை வீசி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.