தங்கள் மதம், பிறந்த நாடு, கலாசார பாரம்பரியத்தின் மீது உண்மையான அன்புடன் செயல்படும் அனைவரும் பிரிவினைவாதிகளின் தந்திரங்களில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டுமென முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘நமது தாய்நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்தும் எந்தவொரு செயலுக்கும் நாம் வார்த்தைகளாக பேசவோ அல்லது சம்மதிக்கவோ கூடாது.
மத போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒவ்வொரு தத்துவமும், புனிதமானதாகக் கருதப்படும்.
ஒவ்வொரு மதச் சின்னமும் முழு மனித இனத்தின் புனிதப் பாரம்பரியமாகும்.
அவை ஒரு இனத்திற்கோ அல்லது மத சமூகத்திற்கோ மட்டும் வரையறுக்கப்பட்ட உரிமைகளோ அல்லது பௌதிகப் பொருட்களோ அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், தொல்பொருள் மதிப்புடைய எந்தவொரு பௌதிக பொருளும் அல்லது பிராந்தியமும் முழு மனித சமூகமும் பெருமைப்படக்கூடிய உலக பாரம்பரியமாக கருதப்பட வேண்டும். ஒரு தேசத்தின் மகத்துவம் அல்லது ஒரு மதத்தின் மேன்மை என்பது அவர்கள் மூலம் முழு உலகத்தின் அருளாளர்களின் சிறந்த நற்பண்புகள் மற்றும் வழிகாட்டுதலின் மீது தங்கியுள்ளது.
அந்த மஹாசார குணங்களை இழிவுபடுத்துவதன் மூலம் தீவிரவாத, மேலாதிக்க மற்றும் வன்முறைச் செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, தங்கள் மதம், பிறந்த நாடு, கலாசார பாரம்பரியத்தின் மீது உண்மையான அன்புடன் செயல்படும் அனைவரும் பிரிவினைவாதிகளின்
தந்திரங்களில் சிக்காமல் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் மதத்திற்காக நாட்டுக்கு அல்லது தேசத்திற்கு எந்தவிதமான எதிர்மறையும் இல்லாமல் உழைத்து அடுத்த தலைமுறை ஒரு நல்ல நாட்டைப்
பெறுவதற்கு பொறுப்புடன் உழைக்க வேண்டும்’ என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.