24 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரேசிலில் ஆளுநர் பதவிக்கான விவாதத்தில் அசம்பாவிதம்

பிரேசிலில் ஆளுநர் பதவிக்கான விவாதம், தொலைக்காட்சியில் நேரலையாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்பட்ட நாற்காலியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாதத்தில் வேட்பாளரான பாப்லோ மார்கல் தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது, ஜோஸ் லூயிஸ் டேடெனா என்பவர் திடீரென நாற்காலியால் தாக்குகிறார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத பாப்லோ மார்கலுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது மார்பு மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
பின்னர் பாப்லோ மார்கல் இல்லாமலே விவாதம் தொடர்ந்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles